Wednesday, 16 December 2015

2015ஆம் ஆண்டில் 205 முறைப்பாடுகள்

 
பொத்துவில் பொலிஸ் நிலையத்தில்  2015ஆம் ஆண்டில் 205 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜி.யூ.வசந்தகுமார தெரிவித்தார். இப்பொலிஸ் நிலையத்தில் 2014ஆம் ஆண்டு 155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் சீர்திருத்தம் தொடர்பான கூட்டம், பொத்துவில் அல் ஹுதா பாடசாலை கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். குடும்பப் பிரச்சினைகள் தொடர்பிலேயே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

No comments: