அம்பாறை, அட்டாளைச்சேனை லக்கிஸ்டோர் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் சென்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை,மோட்டார் சைக்கிளில் சென்றவரும் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.சுக்கூர்(வயது 65) என்ற வயோதிபரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். குறித்த வயோதிபர் சுகயீனம் காரணமாக அட்டாளைச்சேனை அரசினர் வைத்தியசாலையில் மருந்து எடுத்துக் கொண்டு சைக்கிளில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே படுகாயங்களுக்குள்ளானார்.
No comments:
Post a Comment