அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை துறைமுக வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற மனைவியும் குழந்தையும் படுகாயங்களுக்குள்ளாகி பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஒலுவில் 05ஆம் பிரிவைச்சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம். இஸ்மாயில் (வயது 63) என்பவராவார். குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அட்டாளைச்சேனைக்குச் சென்று ஒலுவில் நோக்கி சென்று கொண்டிருந்த போது அக்கரைப்பற்று கல்முனைப் பிரதான வீதியில் ஒலுவில் துறைமுக பிரதான வீதிக்கு திரும்பும் வேளையில் பின்னால் சென்ற வேறொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment