Friday, 20 November 2015

வரவு-செலவுத்திட்டம்,...2016..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது.

தொடர்தும் இணைந்திருக்க....


04:36 PM - சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தெற்காசிய பொருட்களைக் கொள்வனவு செய்து, இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். 
04:36 PM - நாடாளுமன்றத்துக்கு அண்மையில் சர்வதேச கண்காட்சி மத்திய நிலையத்தை நிறுவுவேன்
04:35 PM - விருந்தோம்பல் துறையுடன் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்ற இளைஞர்களுக்கு பயிற்சிப்பாடம் அறிமுகப்படுத்தப்படும். ஆகக்கூடுதலாக 15,000 ரூபாய் பெறுமதியான பாடத்திட்டத்துக்கு அரசாங்கம் 50 சதவீதம் செலுத்தும். 
04:33 PM - சர்வதேச சந்தைக்கொள்ளைக்கு அமைவாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முறைமையை இன்னும் வெற்றிகரமாக்குவதற்கு 2016ஆம் ஆண்டு முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை எதிர்பார்க்கின்றோம்.
04:32 PM - கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரசாங்கக் காணிகளில் வீடுகளை நிர்மாணித்து குறைந்த விலையில் வழங்குவதற்கான முறைமை மேற்கொள்ளப்படும். அதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு கடன் வழங்கப்படும். 
04:30 PM - உருக்கு, ஓடுகள், மாபிள் ஓடுகள் மற்றும் மலசலகூட உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். 
04:29 PM - கட்டட மற்றும் நிர்மாண பயிலுநர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
04:28 PM - நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்த இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான வரி விலக்களிக்கப்படும்.
04:27 PM - நிர்மாணப்பணிகளுக்காக வருகின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிர்மாண நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.
04:26 PM - வீடு, சொத்துகளுக்கான வரம்மை ஏற்படுத்துவதற்காக சட்டத்தில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் கொண்டு வரப்படும். 
04:25 PM - புதிய கிராம வீட்டுத்திட்ட  முறைமை உருவாக்கப்படும். அதற்காக 4,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். வீடொன்றுக்கு 03 இலட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
04:21 PM - சேரிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, தனியார் துறையுடன் இணைந்து 15 இலட்சம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
04:20 PM - பயன்படுத்தப்படாத காணிகளானது வீடுகள் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
04:20 PM - காணிக்காக வங்கி உருவாக்கப்படும்.
04:20 PM - ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கிகளை நிறுவுவதற்கு 25 மில்லியன் ரூபாய் நிதி. 
04:18 PM - இறக்குமதி அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
04:17 PM - உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டுவரப்படும்.
04:17 PM - எரிபொருள் சந்தை உருவாக்கப்படும். 
04:17 PM - புதிய இறக்குமதிப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை நடவடிக்கை எடுக்கும்.
04:04 PM - வெளிநாட்டவர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கப்படும்போது, அறவிடப்படும் வரி விலக்களிக்கப்படும்.
04:04 PM - போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
04:02 PM - யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு 03 வருடங்களுக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்கப்படும். 
04:00 PM - ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்று உருவாக்கப்படும்.
04:00 PM - அரச நிறுவனங்கள் அனைத்தையும்  2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 
03:59 PM - மீனவ மற்றும் விவசாய வலயத்தை உருவாக்குவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:58 PM - தங்கம் இறக்குமதிக்கான 50 உரிமப்பத்திரங்களை அறிமுகப்படுத்துவேன்.
03:58 PM - மாணிக்கக்கற்கள் ஏல விற்பனை இலங்கைக்குள் இடம்பெறுவதற்கு யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன்.
03:55 PM - அலங்காரமீன் கைத்தொழிலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு உந்துவேன்.
03:53 PM - வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் உருவாக்கப்படும். கிராமிய விவசாயத்துக்கு உதவும் வகையில் சிறிய குளங்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படும். அதற்காக 2,000 ரூபாய் ஒதுக்கப்படும்.
03:52 PM - கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவு கொத்தணிக் கிராமமமாக செயல்படுத்தப்படும். இதில் பொதுவசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். ஒரு கிராமத்துக்கு 1,500 ரூபாய் ஒதுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்.
03:48 PM - பாக்கு சேகரிக்கும் வலயம் உருவாக்கப்படும். அந்த தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியில் பயிர் செய்வதற்காக அரசாங்கம் நிவாரணம் வழங்கும்.
03:47 PM - தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:47 PM - தேயிலை தொழிற்சாலை மதீப்பீட்டைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிலோன் ரீ என்ற பெயர் தொடர்ந்து இருப்பதற்கு அந்தப் பெயரை பொறிப்பது கட்டாயமாக்கப்படும்.
03:45 PM - உள்ளூர் கோழி இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட புதிய சந்தைக்கு கோழிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 

03:44 PM - மீனவர்களின் காப்புறுதிக்காக ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:44 PM - உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். 400 பக்கெட்டின் ஆகக் குறைந்த சில்லறை விலை 325 - 295 வரை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்
03:42 PM - உள்ளூர் பால் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு மற்றும் இறக்குமதியை குறைப்பதற்கு நான் மதிக்கின்றேன். எனினும், பால் விலை கூடியதுடன், யோக்கட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்தன.
03:41 PM - பழவகை மற்றும் மரக்கறி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும். இவற்றுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.
03:40 PM - நெல் விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படும். பெரு மற்றும் சிறு விவசாயிகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
03:39 PM - விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
03:36 PM - 2014ஆம் ஆண்டு அரிசி அறுவடை குறைந்திருந்தது. உரப் பாவனையினால் சிறுநீரக நோயாளர்களின எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இன்னும் வாதப்பிரதிநிதிவாதங்கள் இடம்பெறுகின்றன.
03:36 PM - அரிசி ஏற்றுமதி வர்த்தகத்தை நோக்காகக்கொண்டு அரிசி உற்பத்தியாளர்களுக்கு உதவியளிக்கப்படும். அதற்காக வெளிநாட்டுச் சந்தையை அறிமுகப்படுத்துவதற்கு முறைமையொன்று தயாரிக்கப்படும்.
03:34 PM - கீரி சம்பாவுக்கு 50 ரூபாய், சம்பா  நெல்லுக்கு 40 ரூபாய், நாட்டரிசி நெல்லுக்கு 38 ரூபாய் ஆகக்குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரிசி ஒரு கிலோகிராம்  65 ரூபாய்க்கு நுகர்வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
03:33 PM - விவசாய அறுவடையின் போது, விலைக் குறைப்பைத் தடுப்பதற்கு உயர்ந்த தரத்திலான களஞ்சியசாலைகள் உருவாக்கப்படும்.
03:32 PM - புத்துயிராக்கம் இல்லாத இடங்களை தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக்கொடுத்து, அதனூடாக அதனை மேம்படுத்துவதற்காக 1,000 மில்லின் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.
03:31 PM - பல்பொருள் அங்காடிகளில் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிலாளர்களுக்கு சிறிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்
03:30 PM - சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக்கர்கள் கடனை பெறும்போது பிணை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:29 PM - பெரும் வணிக நிறுவனங்களின் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
03:29 PM - மிளகாய், செத்தல் மிளகாய், கிழங்கு உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் ஊடாக நாட்டை தன்னிறைவு வடிவத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
03:29 PM - விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது, வரி நிவாரணங்கள் வழங்கப்படும்.
03:28 PM - புதிய விவசாயக் கொள்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர்  கவனம் செலுத்தியுள்ளனர்.
03:27 PM - நிகர, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்காக இணைந்த கூட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
03:26 PM - சிறு பொருளாதாரத் தோட்டங்கள் மொனராகலை, புத்தளம், யாழ்ப்பாணம், வன்னி உட்பட பல இடங்களில் முன்னெடுக்கப்படும்.
03:25 PM - சகல நிதி நிறுவனங்களும் பரிந்துரைக்கப்பட்ட அதிகார சபையின் கீழ் வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு  செய்துகொள்ள வேண்டும்.
03:24 PM - சிறு மற்றும் மத்தியதர வர்த்தகர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
03:23 PM - வரவு  -செலவுத்திட்டத்தின் யோசனைகளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைக்கின்றார்.
03:23 PM - இன, மத, சமூகத் தடைகளைத் தாண்டி அனைத்து மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்போம்.
03:22 PM - இருளை சபிக்காமல், மெழுகுவர்த்தியை ஏற்றி இருளை விரட்டியடிப்போம்.
03:21 PM - நாங்கள் முன்வைத்த நல்ல விடயங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதி செய்கின்றோம். அதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் தலைமை தாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.
03:19 PM - யாழ்ப்பாணத்தில் வீதியொன்றை உருவாக்குவதற்கு டட்லி சேனநாயக்கவினால் யோசனை முன்வைக்கப்பட்டபோது, மக்கள் ஒரு பிடி அரிசி வழங்கி தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர்.
03:18 PM - சூரியசக்தி மற்றும் வாழ்க்கை அடிப்படையிலான மின்சாரம் தொடர்பில் அந்தந்த பிரிவுகள் பயன்படுத்தப்படவேண்டும்.
03:16 PM - வயதானர்களுக்கு சுகாதாரத்திட்டங்கள்.
03:16 PM - வீதிகளில் போகின்ற மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து, வாகனங்களின் எண்ணிக்கை கூடுவதற்கு, பொதுப் போக்குவரத்து சேவையில் தற்போது இருக்கின்ற நிலைமை காரணமாக அமைந்துள்ளது.
03:13 PM - வேகமாக அதிகரித்து வருகின்ற புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
03:09 PM - மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் முறைமையை மீண்டும் உருவாக்க வேண்டும்.
03:08 PM - ஓய்வூதியம் பெறும் மக்களின் தேவைக்கான சேமிப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
03:07 PM - ஆக்கபூர்வமான ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
03:05 PM - இளைஞர்களுக்கு வேலையின்மை மற்றும் குறைந்த வேலைவாய்ப்பு, பட்டதாரிகளின் ஏற்றத்தாழ்வு இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
03:05 PM - கடந்த அரசாங்கத்தின்போது, கல்விக்கான முதலீடு குறைந்திருந்தது.
03:04 PM - 72 சதவீத மட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரத்துக்கு மிக அதிகமாக உள்ளது.
03:02 PM - அரச கடன் தற்போது 72 சதவீத மட்டத்துக்கு இருக்கின்றது.
03:00 PM - சம்பளச் செலவு கணிசமானளவு அதிகரித்துள்ளது.
03:00 PM - அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு ஆகியவற்றை ஓரளவுக்கு உயர்த்தி எங்களுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
02:59 PM - பொருளாதார வரவு - செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு பூச்சியக் கோட்பாடு பயன்படுத்தப்பட்டது. இதனை செயற்படுத்துவதற்கு இவ்வளவு காலம் எடுத்தமை தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன்.
02:56 PM - பூச்சிய வரவு-செலவுத்திட்ட கோட்பாடு பல நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றது.
02:54 PM - வரி சீர்திருத்த செயன்முறையினூடாக அரசாங்கத்தின் அடிப்படை வீதத்தை ஈடுசெய்வதற்கு முடியாது.
02:54 PM - ராஜபக்ஷ நிர்வாக முறைமையின் ஊடாக நாங்கள் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.
02:52 PM - பொருளாதாரப் பேரழிவு நிலைமை நிரம்பி வழிந்தது. இச்சந்தர்ப்பத்திலேயே இந்த வரவு - செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு நாங்கள் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டோம்.
02:52 PM - வரிப்பணம் நாட்டின் முன்னேற்றத்துக்காக மிகக் கவனமாக பயன்படுத்தப்படவேண்டும்.
02:49 PM - தீர்வு காணமுடியாத இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
02:48 PM - புதிய அரசாங்கம் உருவாகிய பின்னர் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் பல முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
02:48 PM - இலங்கை அரசியலில் புதிய அரசியல் ஏட்டைப் புரட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
02:47 PM - மக்களின் சிறு பிரிவினர் தேசிய வருமானத்தில் கூடுதலாக அனுபவிக்கின்றனர் என்று புலனாகின்றது.
02:46 PM - சட்டச் செயல்முறைகள் தொடர்பில் எதிர்பார்த்திருக்குமாறு தேசபக்த மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
02:45 PM - கடந்த அரசாங்கத்தின்போது வரி ஆதாய மட்டம் குறைந்தமையினால், இலங்கையில் வரி பொருளாதரம் சீர்குலைந்தது.
02:44 PM - பொருளாதாரத்தில் பல்வேறான ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. கடந்த அரசாங்கத்தில் நெடுஞ்சாலைகள், விமான நிலையம் போன்றவற்றுக்காக கூடுதலான வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டது. இந்தச் செலவுகளுக்காக கூடுதலான செலவும் செய்யப்பட்டது.
02:43 PM - தேவையான பொருளாதார மேம்பாடுகளை விடுத்து, பொருளாதார சுபீட்ச யுகத்தை நாட்டில் உருவாக்குவதற்கு கடந்த அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் இருந்தது.
02:42 PM - ஜி.எஸ்.பி. சலுகை இலங்கைக்கு இல்லாமல் போனது.
02:42 PM - சில அரசியல்வாதிகளி்ன் நகைச்சுவை காரணமாக இலங்கை சங்கடமான நிலைக்கு முகங்கொடுத்தது.
02:40 PM - அரசின் அடிவருடிகள் அரசியல்வாதிகளினால், தெற்கில் சுற்றுலா ஹோட்டலில் வைத்து சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டவரை படுகொலை செய்தமையினால், நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இதனால், பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்தது.
02:37 PM - புதிய சிந்தனையினால் பொருளாதாரம் மீண்டும் இலங்கையை நோக்கி வந்தது.
02:36 PM - அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தேசிய பாதுகாப்பை எப்போதும் அலட்சியப்படுத்த மாட்டோம் என்பதுடன், தேசிய பாதுகாப்புக்காக ஆகக்கூடிய அர்ப்பணிப்பைச் செய்வோம்.
02:35 PM - கடும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து சிறையிலிருந்த மக்களின் யுகத்துக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
02:34 PM - நாளுக்கு நாள் அதிகரித்துள்ள கடன் சுமை  காரணமாக மக்கள் எதிர்பார்த்திருந்த தங்களின் மேம்பாட்டுக்கான பொருளாதாரம் கிடைக்கவில்லை.
02:33 PM - பயங்கரவாதிகளின்  இருண்ட யுகத்துக்கு 2009ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
02:33 PM - 2004ஆம் ஆண்டு ஆட்சி மாறியதினால் எதிர்பார்த்திருந்த பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
02:32 PM - ரணில் விக்கிரமசிங்க பிரதமரால்  2001ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டுவரை பொருளாதார வேகம் நல்ல மட்டத்தில் இருந்தது.
02:31 PM - 2001ஆம் ஆண்டு விவசாயப் பொருளாதார மேம்பாடு அதிகரித்திருந்தது.
02:30 PM - பயங்கரவாதச் செயற்பாடுகளின் காரணமாக பொருளாதாரம் சீர்குலைந்திருந்தது.
02:30 PM - ரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி, ரொணில் டி மேல் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மிக விசேடமான அரசியல் பாத்திரங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நல்வழிப்படுத்தினர்.
02:28 PM - இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன, பொருளாதாரக் கொள்கையினூடாக 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரத்துக்குள் நுளைந்தோம்.
02:26 PM - எங்களுடைய பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
02:25 PM - காணி, வீடு மற்றும் சுகாதாரப் பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
02:24 PM - நீண்டகால பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முக்கியமாக பொருளாதார அடித்தளம் அத்தியாவசியமாகும்.
02:23 PM - எதிர்காலச் சந்ததியினர் அனுபவிக்கக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்.
02:21 PM - கடந்த 10 மாதங்களில் இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டது.
02:18 PM - சர்வதேச சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
02:18 PM - இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச நாடுகளிலிருந்து நல்லாட்சிக்கு பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
 

02:18 PM - எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.

 

02:17 PM - ஜனவரி 08ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இந்நாட்டின் திருப்புமுனை.
 

02:17 PM -  நாட்டின் 20 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பிக்கின்றேன்.
 

01:56 PM - நிதியமைச்சர் சமூகமளித்தார்.

No comments: