Wednesday, 11 November 2015

விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் இன்று புதன்கிழமை நண்பகல்  இரண்டு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் பகுதியில் இருந்து தம்பிலுவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிலும் திருக்கோவில் முருகன் ஆலய வீதியில் வந்த மோட்டார் சைக்கிலுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் காயமடைந்த இருவரும் திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments: