Aசட்டவிரோதமாக சொட்கண் துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் 03 தோட்டாக்கள், ஒரு வெற்றுத்தோட்டாவையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் குருக்கள் ஒருவர் உட்பட 04 பேரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டுப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களினுள் குருக்கள் ஒருவருடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மற்றுமொருவரும் அடங்குகின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை தொடர்ந்து வாகனங்களை சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது, முச்சக்கரவண்டியில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சொட்கண் துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் 03 தோட்டாக்கள், ஒரு வெற்றுத்தோட்டாவையும் அம்முச்சக்கரவண்டியும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment