Friday, 27 November 2015

சிறுதொழில் முயற்சியாளர்களை அறிவூட்டும் பயிற்சிக் கருத்தரங்கு

(தியாஷினி)

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களை அறிவூட்டும் பயிற்சிக் கருத்தரங்கொன்று இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிக் கருத்தரங்கிற்கு வளதாரர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனுடன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.சந்திரசேன மற்றும் கே.லோகநாதன் ஆகியோரும், பங்குபற்றுனர்களாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் சுமார் 40 பேரும் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமான குறித்த பயிற்சிக் கருத்தரங்கில் சிறுகைத்தொழில் உற்பத்திகளைத் தரப்படுத்தல் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரசேனவும், சிறுகைத்தொழில் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக பிரதேச செயலாளர் ஜெகதீசனும், சிறுகைத்தொழில் முயற்சிகளில் கணக்குகளைப் பதிவுசெய்து பேணும் முறைகள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் லோகநாதனும் பயிற்சிகளை வழங்கினர்.


















No comments: