Wednesday, 4 November 2015

பெண்னை வல்லுறவுக்குட்படுத்திய பொலிஸ் அதிகாரி...


வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்த பொலிஸ் அதிகாரி தன்னை 12 வயதிலிருந்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாக பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய யுவதி ஒருவர் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை(04) மாலை திடீர் சுகவீனமுற்ற நிலையில் குறித்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது,அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் குறித்த யுவதி 12  வயதிலிருந்து கொழும்பு தெஹிவளையிலுள்ள பிரதான பொலிஸ் பரிசோதகரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டதாகும் அங்கு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு வந்ததாகவும் இறுதியில், குறித்த பொலிஸ் அதிகாரி தனது நண்பர்களையும் அழைத்து வந்து இந்த யுவதியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய வேளையில், அவர் அங்கிருந்து தப்பி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது, அமைச்சு பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்


No comments: