அக்கரைப்பற்று, சாகாமம் வீதி வழியாக முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக 62 மதுபானப் போத்தல்களை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டிச் சாரதியை செவ்வாய்க்கிழமை (24) இரவு கைதுசெய்ததுடன், அம்முச்சக்கரவண்டியுடன் மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அக்கரைப்பற்றிலிருந்து பனங்காடுப் பிரதேசம் நோக்கி சந்தேகத்துக்கிடமான முறையில்; சென்றுகொண்டிருந்த இம்முச்சக்கரவண்டியை வழிமறித்து சோதனை செய்தனர். இதன்போது, முச்சக்கரவண்டிக்குள் மதுபானப் போத்தல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். போயா தினத்தில் கூடிய விலைக்கு மதுபானத்தை விற்கும்; நோக்கிலேயே சந்தேக நபர் மதுபானப் போத்தல்களை கொண்டுசென்றிருக்கலாமெனத்; தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment