தம்பிலுவில் றேஞ்சஸ் விளையாட்டுக்கழகத்தின் 28 வது ஆண்டு வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 24 கழகங்கள் பங்கு கொண்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதினாள் நிகழ்வு நேற்று 08 ஞாயிற்றுக்கிழமை மாலை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது
அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி 04 நாட்கள் தொடர்சியாக இடம் பெற்றது இதில் இறுதி நாள் நிகழ்வில் மோதிக் கொண்ட அக்கரைப்பற்று ஹாட் அண்ட் சொஃப்ட் அணியினரும் அட்டாளைச்சேனை பைனா அணியினருக்கும் இடையில் இடம் பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியாக ஹாட் அண்ட் சொஃப்ட் தெரிவானதுடன் இரண்டாம் இடத்தினை அட்டாளைச்சேனை பைனா அணிகைப்பற்றியது
இப் போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற ஹாட் அண்ட் சொஃப்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மனித்ததுடன் 06 ஓவர்களுக்கு 83 ஓட்டம்களை பெற்றிருந்தனர்.
இதனை எதிர்த்து ஆடிய அட்டாளைச்சேனை பைனா அணி 06 ஓவர்களுக்கு 65 ஓட்டம்களை பெற்றிருந்தனர்.
இதனடிப்படையில் 19 ஓட்டம்களால் வெற்றி பெற்ற ஹாட் அண்ட் சொஃப்ட் அணி 15,000 ரூபாயினையும் இரண்டாம் இடத்தினை அட்டாளைச்சேனை பைனா அணியினருக்கு 10,000ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment