பிரான்ஸின் வடக்கு நகரான சென்ட் டெனிஸ் பகுதியில் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரியளவு வெடிப்புச் சத்தங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள சி.என்.என் செய்தியாளரின் கருத்தின்படி, 5 அல்லது 6 வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அங்கு ஒழிந்திருந்ததாகக் கருதப்படும் ஆயுததாரிகளைத் தேடி பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் குறைந்தது 3 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதில், தற்கொலைதாரிகள், தங்களைத் தாங்களே வெடிக்க வைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், உத்தியோகபூர்வமான தகவல்களெவையும் வழங்கப்படவில்லை.
No comments:
Post a Comment