அம்பாறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் நால்வர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் சிசிரகுமார தெரிவித்தார்.
இதற்கிணங்க,அம்பாறை தேர்தல் தொகுதியிலிருந்து உஹன பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எச். நிபுன அமித பந்து 301 வாக்குகளையும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் முஹம்மத் டில்ஷாத் 230 வாக்குகளையும் பொத்துவில் தேர்தல் தொகுதியிலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தாவூத் லெப்பை முஹம்மத் ஷாஹிர் 519 வாக்குகளையும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த இராசதுரை லிகிர்தன் 450 வாக்குகளையும் பெற்றுத் தெரிவாகியுள்ளனர்
No comments:
Post a Comment