Monday, 18 January 2016

புதிய அரசியலமைப்பு மக்களின் கருத்து..

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கையின்  முதற்கட்டம், இன்று திங்கட்கிழமை (18) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் வைத்தே மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை இடம்பெறும் என, அக்குழு தெரிவித்துள்ளது.
காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், 0112437676 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 0112328780 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யமுடியும் என தெரிவித்துள்ள அக்குழு, constitutionalreforms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் கருத்துக்களை அனுப்பமுடியும் எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகளை கடிதங்கள் மூலம் அனுப்புவதாயின், தலைவர், அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான குழு, ஸ்டேபிள் வீதி, கொழும்பு-02 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துக்களை, சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவிக்க முடியும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் தொடர்பில், அலரிமாளிகையில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments: