ஆலையடிவேம்பு
பிரதேசத்திலுள்ள வரலாற்றுத் தொன்மைமிக்க அக்கரைப்பற்று, பனங்காடு, பட்டிநகர்
அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மடத்துக்கான
அடிக்கல் நடும் வைபவம் ஆலயத் தலைவர் கந்தவனம் கார்த்திகேசு தலைமையில் இன்று (22)
காலை ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில்
சம்பிரதாயபூர்வமான சமயச்சடங்குகளை ஆலய குரு சிவஸ்ரீ இரவீந்திரநாதன் கப்புகனார்
நடாத்திவைத்தார்.
கிழக்கிலங்கையில்
வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற தலமான பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன்
ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள குறித்த மடத்துக்கான கட்டுமான வேலைகளின் ஆரம்ப
நிகழ்வான இதில் பிரதேச செயலாளர், ஆலயத் தலைவர் ஆகியோருடன் அறங்காவலர் சபை
அங்கத்தவர்களும் இணைந்து சுபவேளையில் அடிகற்களை அங்கு நட்டுவைத்தனர்.
அதனைத்
தொடர்ந்து இந்நிகழ்வைச் சிறப்பிக்கும்வகையில் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும்
இடம்பெற்றன.
No comments:
Post a Comment