கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுகிர்தராஜனின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி!
திருமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு தெற்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நினைவு அஞ்சலி நிகழ்வில் சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களின் நினைவலைகள் நினைவுப் பேருரை உதவிகள் வழங்கல் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அவர்களது உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆவணப்பட வெளியீடு ஆகியனவும் இடம் பெறவுள்ளன.
No comments:
Post a Comment