அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவர் அக்கரைப்பற்று பொலிசாரால் நேற்று(19) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் கொள்ளைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை தொடந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களுள் இரு பெண்களும் அடங்குவதுடன்
கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்
No comments:
Post a Comment