ஜனாதிபதி
செயலகமும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நாடு
தழுவிய ரீதியில் ஜனவரி, 25 முதல் 30 வரை ஏற்பாடு செய்துள்ள தேசிய விளையாட்டு
மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தையொட்டிய மூன்றாம் நாள் நிகழ்வாக ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் உடல், உள ஆரோக்கியம்
தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச
செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமைதாங்கிய இக்கருத்தரங்கினை ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் ஏற்பாடு செய்திருந்தார்.
பிரதேச
செயலாளர் வி.ஜெகதீசனுடன் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், நிருவாக
உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக
உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் சார்பாகக் கலந்துகொண்டதோடு
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.நஸ்லீன், திருக்கோவில் மாவட்ட
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எfப்.எம்.பாஹிம் ஆகியோர் வளவாளர்களாகவும்,
அக்கரைப்பற்று மீராநகர் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய அதிகாரி திருமதி.
எம்.றூமி ஸfபா இலகுபடுத்துனராகவும் கலந்துகொண்ட இக்கருத்தரங்கைப் பிரதேச செயலாளர்
தனது தலைமையுரையோடு ஆரம்பித்துவைத்தார். இதில் பங்குபற்றுனர்களாக ஆலையடிவேம்பு
பிரதேச இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.
முதலில் போதைப்பொருட்களும்
உடல் ஆரோக்கியமும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நிந்தவூர் மாவட்ட
வைத்தியசாலையின் வைத்தியர் எம்.நஸ்லீன் குறித்த கருத்தரங்கின் முதலாவது அமர்வை
நடாத்தியதுடன், உடற்பயிற்சியும் ஆரோக்கிய வாழ்வும் என்ற தொனிப்பொருளில்
மூன்றாவதும் இறுதியுமான அமர்வையும் திறம்பட நடாத்தியிருந்தார்.
இக்கருத்தரங்கின்
இரண்டாவது அமர்வைத் தொற்றா நோய்களும் இளையோர் சுகாதாரமும் என்ற தலைப்பில் திருக்கோவில்
மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் எம்.எfப்.எம்.பாஹிம் நடாத்தினார்.
No comments:
Post a Comment