அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் சந்தியை அண்டியுள்ள வயலிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலத்தை
இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில்; ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சங்கமன் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் குணசேகரம் (வயது 37) என்பவரின் சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளது. வயலில் காவல் கடமையில் ஈடுபடுவதற்காக அவரது வீட்டிலிருந்து புதன்கிழமை (20) சென்றுள்ள இவரின் முகம், கழுத்து மற்றும் முதுகு ஆகியவற்றில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment