Monday, 4 January 2016

ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

திவிநெகும திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளும் கோழித்தீனும் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (04) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் திவிநெகும உதவிபெறுகின்ற, கோழி வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட 15 பயனாளிகள் தலா 42 கோழிக்குஞ்சுகள், கோழித்தீன், கோழிகளுக்கான தீன் பாத்திரம் மற்றும் நீர்ப் பாத்திரம் என்பனவற்றைப் பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளரோடு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கணக்காளர் கே.கேசகன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.பி.இராசஸ்ரீ மற்றும் எஸ்.பாக்கியராஜா ஆகியோர் குறித்த பயனாளிகளுக்கான குறித்த வாழ்வாதார வழங்கிவைத்தனர்.






No comments: