களுவாஞ்சிக்குடிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவினை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் உண்டியலில் இருந்த பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் வியாழக்கிழமை இரவு 22 ஆம்திகதி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் ஸ்ரீ மத்துமாரியம்மன் ஆலயம் துறைநீலாவணைக் கிராமத்தின் கிழக்குப்புறமாக குளத்தின் அருகில் இருக்கின்றது
இவ் ஆலயத்தின் வெளிப்புறக் கதவினை உடைத்து அம்மனுடைய சிலை அமைந்துள்ள மூலஸ்தானத்தின் கதவையும் உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க நகையினைத் திருடியதுடன் ஆலயத்தின் வெளிப்புறமாக இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தினையும் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர் .மேலதிக விசாரணையினை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
haran
No comments:
Post a Comment