ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோரளன்கேணியில் 2 வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை இரண்டு தினங்களாக சுகவீனமுற்ற நிலையிலிருந்ததாகவும் இன்று காலை
ஓமத்திரவம் குடிக்கக் கொடுத்ததன் பின்னர் மாடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
haran
No comments:
Post a Comment