Monday, 12 March 2018

இளைஞன் ஒருவரின் சடலம் மீட்ப்பு

ஏறாவூர்- பலாச்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பலாச்சோலை முதலாவது குறுக்கு வீதியை அண்டிய 21 வயதான இளைஞனின் சடலமே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பகல் வேளைக்குப் பின்னர், நீண்ட நேரமாகியும் வீட்டின் அறைக் கதவு திறக்கப்படாமலேயே பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் கொண்ட வீட்டார், அறையைத் திறந்து பார்த்தபோதே அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கூலித் தொழிலாளியான இவர் பெற்றோருடனும் சகோதரர்களுடனும் ஒரு வீட்டில் ஒன்றாகவே வசித்து வந்ததாக தெரிவித்துள்ள பொலிஸார், இவ் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
haran

No comments: