வாழைச்சேனை – கிரானில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணப்படுவதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் அருகே பயணப்பை உள்ளிட்ட தடயங்களைக்கொண்டு பார்க்கும்போது இந்த யுவதி மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப் பெண்ணாக தொழில் புரிந்தவராக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
haran
No comments:
Post a Comment