haran
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்களுக்கான விசேட கருத்தரங்கு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், க.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கனகசபை, முன்னாள் மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு உள்ளுராட்சி மன்ற நடவடிக்கைகள் மற்றும் உள்ளுராட்சி சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக மேற்படி கருத்தரங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது வளவாளராக அன்பழகன் குரூஸ் என்பவர் கலந்து கொண்டு உள்ளுராட்சி விடயங்கள் தொடர்பில் விரிவுரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment