Saturday, 17 March 2018

பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவன் கைது

துவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இச் சம்பவம் மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாவுக்கு வந்த குறித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த வியாழக்கிழமை வெளிச்ச வீட்டு பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் அவர் மீது பாலியல் சேஷ்டை விடுத்ததாக அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளதையடுத்து குறித் சிறுவனை நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்திவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

haran

No comments: