Saturday, 24 March 2018

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- மைலம்பாவெளியில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாவகச்சேரி நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஹேரத், என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மைலம்பாவெளியில் உள்ள ஆலயம் ஒன்றில் குறித்த பொலிஸ் பரிசோதகரும் குடும்பத்தினரும் வழிபட்டுவிட்டு வந்துகொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மூவர் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த பெண்னொருவரின் கைப்பையையும் பறித்துச்செல்ல முற்பட்டுள்ளனர்

இந்நிலையில், குறித்த மூவருக்கும் பொலிஸ் பரிசோதகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது மதுபோதையில் இருந்த மூவரும் இணைந்து பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியுள்ளர்.

இதையடுத்து படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ள பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
haran

No comments: