Saturday, 24 March 2018

புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பேரூந்துகள சேவையில்

haran
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதி கருதி இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக 2000 பேரூந்துகளை  சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.




இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி இது தொடர்பாகத் தெரிவிக்கையில், எதிர்வரும் 6ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் இந்த பேரூந்து  சேவைகள் இடம்பெறும். கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ்தரிப்பு நிலையம், மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட 103 டிப்போக்களை உள்ளடக்கிய வகையில், இந்த விசேட பேரூந்து சேவைகள் இடம்பெறும்.
நிறுவன வலயத்திற்கு அருகாமையில் இந்த பேரூந்து சேவை முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி குறிப்பிட்டார். தேவையான மேலதிக பேரூந்துகள் நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக சேவையில் 2000 பேரூந்துகள் Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

No comments: