மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் இருந்தும், காரைதீவு, மல்வத்தை, வீரமுனை, அண்ணமலை, நாவிதன்வெளி மக்களையையும் கல்முனைக்கு தேவைகளின் நிமித்தம் வருகை தந்த மக்கள் கல்முனையில் நடக்கும் கலவரங்களினால் எங்கு போவது எப்படி போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அந்தத் மக்களை கல்முனை தமிழ் இளைஞர் சேனை கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியம் மற்றும் அருகில் உள்ள தமிழ் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து மீட்டு பாதுகாப்பாக கல்முனையை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். அவர்களோடு சொறிக்கல்முனை பங்குத்தந்தையினை பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார்கள்.
கடந்தகாலங்களில் இவர்கள் போக்குவரத்தின்றி கஸ்ட்டப்பட்டு மறுநாள் போகின்ற நிலைமையும் இருந்தது.
ஆனால் இம்முறை அவர்களை பாதுகாப்பாக மீட்டு அமைதியான முறையில் அவரவர் இடங்களுக்கு கொண்டு சென்றனர் இந்த தமிழ் இளைஞர்கள் இவர்களுக்கு இப் பகுதிவாள் மக்கள் நன்றி கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment