Thursday, 15 March 2018

வெளிநாட்டவர் ஒருவர் கைது

அம்பாறை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான போத்தல்களை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபருக்கு  எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், அன்றைய தினம்  அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்பாறை, அறுகம்பை பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் நடத்திவந்த ஹோட்டலில் மதுவரித் திணைக்களத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  நேற்று (புதன்கிழமை) மதுபான போத்தல்களுடன்  குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது ஆயிரக்கணக்கான பியர் ரின்களும் 200க்கும் அதிகமான வைன் போத்தல்களும் மீட்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார். மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் எந்தவிதமான அனுமதியும் பெறப்படாமல் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மதுபான போத்தல்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனவும், இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

haran

No comments: