மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகின்றது.
போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்து முதலாவது விமான சேவையை மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து இச்சேவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
1488 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட ஓடு பாதையைக் கொண்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம் இலங்கையில் திறக்கப்படும் நான்காவது விமான நிலையமாகும்.
கட்டுநாயக்கா மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுடன் இரத்மலான விமான நிலையமும் இதற்கு முன்னர் இலங்கையில் செயற்பட்டு வருகின்றது.
இவ்விமான நிலையத்தினூடாக கொழும்புக்கான விமான சேவைகள் தினமும் இடம்பெறுமென மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக பொன்சேகா தெரிவித்தார்.

haran
(சிவம்)
மட்டக்களப்பு விமான நிலையமானது, 25 வருடங்களின் பின்னர் சிவில் விமான சேவைகள் அதிகார சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.
யுத்த காலத்தில் பல்வேறு அழிவுகளைச் சந்தித்திருந்த குறித்த விமான நிலையம், மீள புனரமைக்கப்பட்டு கடந்த 2016ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட்டது.
எனினும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான செயற்பாட்டு தேவைகளை உறுதிப்படுத்தும் வரை அதன் நடவடிக்கைகள் ஒத்தவைக்கப்பட்டிருந்தன. தற்போது அவை பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுமார் 1,066 மீற்றர் நீளமும் 46 மீறற்றர் திறந்த ஓடுபாதையும் கொண்ட மட்டக்களப்பு விமான நிலையத்தில், ஒளியமைப்புடன் கூடிய புதிய ஓடுபாதை மற்றும் பயணிகள் வெளியேறும் பகுதி என்பன புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,400 மில்லியன் ரூபாய் செலவில் இவை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.
கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது, ராணுவ மற்றும் விமானப் படையின் நடவடிக்கைகளுக்காக இவ்விமான நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment