Thursday, 15 March 2018

வசந்தா வைத்தியநாதன் ,,இழப்பு உலகிற்கு ஈடுசெய்யமுடியாது

 வசந்தா வைத்தியநாதன் அம்மையாரின் இழப்பு உலகிற்கு ஈடுசெய்யமுடியாது –அம்பாறை ,  ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் 

 



அருள்மொழியரசு, தமிழ் மொழியரசு வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மாவர்களுடைய ஆத்மா இறையடிசேர பிரார்த்திப்பதோடு, அருள்மொழியரசு வசந்தா வைத்தியநாதன் அம்மாவினுடைய  மறைவுச் செய்தி கேட்டு, இலங்கை சைவ மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் சைவ மக்கள் அனைவரும் ஆழ்ந்த வேதனையுடன் இருக்கின்ற இத்தருணத்தில் அம்மையாரின் இழப்பு சைவ உலகிற்கு ஈடுசெய்யமுடியாதொன்று என  ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் சார்பில் தலைவர்  சி.கனகரெட்ணம் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார் 

 
மேலும் வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மணியவர்கள் ஆழ்ந்த தமிழ் அறிவும், இலக்கிய அறிவும், சமஸ்கிருத அறிவும் கொண்ட ஒரு பெருமைக்குரியவர். பல்வேறு ஆலய நிகழ்வுகள் கும்பாவிஷேகங்கள், மகோற்சவங்களிலே நேர்முக வர்ணனை செய்கின்றபொழுது அழகிய தமிழும் அவர்களுடைய கம்பீரமான கனீர் என்ற குரலும் எவராலும் மறக்கமுடியாது.

 

அன்னையின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மையாரின் பிரிவு சைவ உலகத்திற்கு ஈடு செய்யமுடியாது. வாழ் நாளில் அம்மையார் அன்பாகவும் பன்பாகவும் பணிவாகவும் நடந்துகொள்ளக்கூடியவர்கள். எப்பொழுதும் சமூக நலன் கருதி சிந்தனை கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள்.

 
அருள்மொழியரசு வசந்தா வைத்தியநாதன் அம்மையார் அவர்கள் இலங்கை வானொலியில்  சைவ நற்சிந்தனை சிந்தனை போன்ற நிகழ்வுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் அருமையான கருத்துக்களைக் கூறக்கூடியவர்கள் இன்று இல்லை இவரின் ஆத்ம சாந்திவேண்டி நாமும் பிரார்த்திப்போம் haran

No comments: