மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கொலைசெய்யப்பட்ட நபர் 39 ஆம் கிராமத்தில் வயல்வெளி ஊடாக வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த 39 ஆம் கிராமத்தினை சேர்ந்த 49 வயதான கமலேஸ்வரன் என்பவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:
Post a Comment