Monday, 12 March 2018

உண்டியலைத் திருடிய இளைஞன் கைது

ஏறாவூர்- கொம்மாதுறைப் பிரதேசத்தில் உள்ள காளி கோயில் உண்டியலைத் திருடிய இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கொம்மாதுறை 10ஆம் கட்டை ரயில் பாதையோடு அமைந்த புதருக்குள் மறைந்திருந்து திருடப்பட்ட உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் இடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 179 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் வெல்லாவெளியைச் சேர்ந்த 18 வயதான இளைஞன் என தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
haran

No comments: