haran
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முறக்கொட்டன்சேனை, தேவாபுர மக்களால் முறக்கொட்டான்சேனை மட்ஃஇராமகிருஷ்ண த.க.பாடசாலையில் 35 வருடங்கள் ஆசிரியராகவும் உப அதிபராகவும் அளப்பெரிய சேவையாற்றி, குடும்ப வாழ்விலும் 10 குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் 80 வயதான ஓய்வுபெற்ற திருமதி. செல்லம்மா வேலுப்பிள்ளளை (செல்லமாக்கா டீச்சர்) அம்மணியை கௌரவிக்கும் நிகழ்வு 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது..
இந்தக் கௌரவிப்பiனை பழைய மாணவர்கள், தேவாபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம,; மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், நட்சத்திர கொத்தணி அமைப்பு, எல்.ஓ.எச் நிறுவனம், கஜமுகன் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து நாடாத்தியது.
இந்நிகழ்வில் இவரது கணவர் அமரர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் முயற்சியால் இக் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்ட அரிசியாலை, தேவாபுர புகையிரத நிலையம் போன்றவை நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும் இக்கிராமத்தில் இளமாணிப்பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிப் பெண்களுக்கும், முதியோர் சங்கப் பெண்களுக்கும் கௌரவிப்புகள் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கோரளைப்பற்று பிரதேசசெயலாளர் சு.ராஜ்பாபு வேள்ட்விசன் நிறுவனத்தினர் பாடசாலைகளின் அதிபர்கள் ஊர் பெரியோர்கள் கலந்து சிறப்பித்தனர்
No comments:
Post a Comment