Saturday, 24 March 2018

மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை

மட்டக்களப்பில்  உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகின்றது.

போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்து முதலாவது விமான சேவையை மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து இச்சேவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பேரூந்துகள சேவையில்

haran
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதி கருதி இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக 2000 பேரூந்துகளை  சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- மைலம்பாவெளியில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Friday, 23 March 2018

பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம்

haran
திருகோணமலை மாவட்டத்தில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.

பயனாளி ஒருவருக்கு 20 முதல் 45 வரையான ஒரே இன பழக்கன்றுகள் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையம் தெரிவித்தது.

மா, மாதுளை முதலான பழ மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன.

ஆலயத்தில் கொள்ளை




களுவாஞ்சிக்குடிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவினை  உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும்  உண்டியலில் இருந்த பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் வியாழக்கிழமை இரவு 22 ஆம்திகதி இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பாக  மேலும் தெரியவருகையில் ஸ்ரீ மத்துமாரியம்மன் ஆலயம் துறைநீலாவணைக் கிராமத்தின் கிழக்குப்புறமாக  குளத்தின் அருகில்  இருக்கின்றது

 இவ் ஆலயத்தின் வெளிப்புறக் கதவினை உடைத்து அம்மனுடைய சிலை அமைந்துள்ள மூலஸ்தானத்தின் கதவையும் உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த  தங்க நகையினைத் திருடியதுடன் ஆலயத்தின் வெளிப்புறமாக இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தினையும் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர் .மேலதிக விசாரணையினை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தில் கொள்ளை Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby
haran

Monday, 19 March 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள்



இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் இம்மாதம் 19 - 22 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் முதல் நாளில் விசேடமாக அனுஸ்டிக்கப்படும் விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல மேம்பாட்டு அரச, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களின் தினத்தைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வைபவமானது இன்று (19) காலை இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரு வேறு பகுதிகளில், ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதுடன், மற்றொரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Sunday, 18 March 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு செயலமர்வு

haran
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்களுக்கான விசேட கருத்தரங்கு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் இடம்பெற்றது.

யுவதி சடலமாக மீட்ப்பு

வாழைச்சேனை – கிரானில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணப்படுவதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் வவுனியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Saturday, 17 March 2018

பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவன் கைது

துவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Thursday, 15 March 2018

இலங்கையில் இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டவர் ஒருவர் கைது

அம்பாறை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான போத்தல்களை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உண்டியல்களைத் திருடிச் சென்ற சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் தளவாய்  பிரதேசத்தில் உள்ள பத்தினி அம்மன் கோயில் மற்றும் கொம்மாதுறை காளியம்மன் கோயில் ஆகியவற்றிலிருந்த காணிக்கை உண்டியல்களைத் திருடிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரையும் இம்மாதம் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்தா வைத்தியநாதன் ,,இழப்பு உலகிற்கு ஈடுசெய்யமுடியாது

 வசந்தா வைத்தியநாதன் அம்மையாரின் இழப்பு உலகிற்கு ஈடுசெய்யமுடியாது –அம்பாறை ,  ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் 

 


Wednesday, 14 March 2018

ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று காலமானார்.

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று காலமானார்.

Monday, 12 March 2018

உண்டியலைத் திருடிய இளைஞன் கைது

ஏறாவூர்- கொம்மாதுறைப் பிரதேசத்தில் உள்ள காளி கோயில் உண்டியலைத் திருடிய இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இல்ல விளையாட்டு போட்டி

haran
(சஞ்சயன்)

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பாடசாலையின் அதிபர் தலைமையில், அண்மையில் இடம்பெற்றது.

இளைஞன் ஒருவரின் சடலம் மீட்ப்பு

ஏறாவூர்- பலாச்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sunday, 11 March 2018

186 பேஸ்புக் கணக்குகள் , கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை

haran
மக்கள் மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்லடி வாவியிலிருந்து சடலம் மீட்பு

 காத்தான்குடி நகரில்  சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர்,  இன்று (11) மாலை மட்டக்களப்பு - கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

Friday, 9 March 2018

ஓய்வுக்கு கெளரவம்

haran


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முறக்கொட்டன்சேனை, தேவாபுர மக்களால் முறக்கொட்டான்சேனை மட்ஃஇராமகிருஷ்ண த.க.பாடசாலையில் 35 வருடங்கள் ஆசிரியராகவும் உப அதிபராகவும் அளப்பெரிய சேவையாற்றி, குடும்ப வாழ்விலும் 10 குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் 80 வயதான ஓய்வுபெற்ற திருமதி. செல்லம்மா வேலுப்பிள்ளளை (செல்லமாக்கா டீச்சர்) அம்மணியை கௌரவிக்கும் நிகழ்வு 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது..

Thursday, 8 March 2018

ஒரு வாரத்துக்கு மின் துண்டிப்பு

அவசரத் திருத்த வேலை காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதென, இலங்கை மின்சார சபையின் பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

Wednesday, 7 March 2018

சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்



சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய ரீதியில் மார்ச் 08ம் திகதி கொண்டாடப்படுவது சகலரும் அறிந்தவிடயம்.



 இது சமுக அரசியல் பொருளாதார தளங்களில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் எதிர்கால நிகழ்கால நோக்கங்களை சாதனைகளையும் எமது தற்கால மற்றும் எதிர்கால சந்ததிக்கு எடுத்துக் கூறும் தினமாக அமைகின்றது

2 வயதுடைய ஆண் குழந்தை உயிரிழப்பு


ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோரளன்கேணியில் 2 வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இளைஞர்களுக்கு நன்றி தெரிவிப்பு



மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் இருந்தும், காரைதீவு, மல்வத்தை, வீரமுனை, அண்ணமலை, நாவிதன்வெளி மக்களையையும்   கல்முனைக்கு தேவைகளின் நிமித்தம்  வருகை தந்த மக்கள்  கல்முனையில் நடக்கும் கலவரங்களினால் எங்கு போவது எப்படி போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

Tuesday, 6 March 2018

அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் சில இடங்களில் வன்செயல்கள் இடம்பெற்றதை அடுத்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில்

 கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து  தங்களது கண்டனத்தை தெரிவிக்க  ஹர்த்தால் போடப்பட்டுள்ளது .

 போலீசார் , இராணுவம் வரவழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது .

ஹர்த்தால்

haran
கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று (06) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Monday, 5 March 2018

21 பேரும் பிணையில் விடுதலை


சகா)
அட்டப்பள்ளம் மயானம்  சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 21 பேரும்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அட்டப்பள்ள இந்துமயான விவகார ஆர்ப்பாட்டத்தின்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டப்பள்ள 21பேரும்   (05) திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்து மயான விவகாரம்


 சகா)





அட்டப்பளம் இந்து மயான விவகாரம் தொடர்பில் சம்மாந்துறைப்பொலிசாரால் அழைக்கப்பட்ட 25 தமிழ்மக்கள் நேற்று(2) மாலை 5.00மணியளவில் சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு அவர்களில் 23ஆண்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை


பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

Friday, 2 March 2018

குடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.