அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை மிருக வேட்டைக்குச் சென்றதாகக் கூறப்படும் 2 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் மிருக வேட்டை இடம் பெறுவதாகபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அக்காட்டுப்பகுதிக்குச் செல்லும் வழியில் இவர்களைக் கண்டு தாம் விசாரணை மேற்கொண்டபோது, இச்சந்தேக நபர்கள் மிருக வேட்டையில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இச்சந்தேக நபர்களை 4 பொறிவெடிகளுடன் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கூவில் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment