NEWS BY - KIRUSHANTHAN
இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட "வன் சிறிலங்கா ஜேனலிசம் பொலோசிப்" பயிற்சி கற்கை நெறியின் சிறந்த ஊடகவியாலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு (20) கொழும்பு-07, லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயா ஆய்வுக்குமான நிறுவனத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
நிகழ்வில் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் சார்பில் பங்கேற்ற ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார் தமிழ் மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்டதுடன் , சிங்கள மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதினை ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிந்து தனதாக்கி கொண்டார் ,இருவருக்கும் ஸ்மாட் கையடக்க தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டன
சமூக பிரச்சினைகள் தொடர்பான சிறந்த கட்டுரைகளை வெளியீடு செய்து சிறப்பாக பயிற்சியினை பூர்த்தி செய்த 8 ஊடகவியலாளர்கள் "மெரிட்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த தினகரன் பத்திரிகை நிருபர்கள் என்.ஹரன், வசந்தா அருள்ரெட்ணம், யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவம் செய்த சுமித்தி தங்கராசா, எங்கள் தேசம் நிருபர் அபுபக்கர் பாயிஸ், சுடர் ஓளி நிருபர் சனத் , பிபிசி நிருபர் ராகுல். ராவய பத்திரிகையின் நிருபர் இந்துனில், டிலிசா, உள்ளிட்டவர்கள் சிறந்த மெரிட் விருதினை பெற்றுக் கொண்டதுடன் வவுனியா ச .அகலிகா ,அம்பாறை மாவடடத்தினை சேர்ந்த ஏ.எல்.எம்.ஸினால் ,யு .எல்.எம்.றியாஸ் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்
நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சாம் டி சில்வா தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய கலந்து கொண்டு பயிற்சி கற்கை நெறியை பூர்த்தி செய்த தமிழ் - சிங்கள மொழி மூலமான சுமார் 25 ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
கடந்த 6மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 30 இற்கும் மேற்பட்ட பல்தரப்பட்ட ஊடகவியலாளர்களால் ஆராயப்பட்ட நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள மக்களது பிரச்சினைகளை தாங்கிய 60இற்கும் மேற்பட்ட விவரண கட்டுரைகள் பிரபல பத்திரிகைகள் மூலமாக வெளியிடப்பட்டன.
நிகழ்வில் திறந்த பல்கலைக்கழக சமூகவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹருனி அமரசூரிய, ஆய்வு அதிகாரி டீபான்சலி அபேயவர்த்தன, இணையத்தள ஊடக ஆய்வாளர் ஹஸ்ஸாலா அன்வர் இன்டர் நியூஸ் நிகழ்ச்சி உத்தியோகத்தர் சிபான் அகமட் ரொய்டர்ஸ் ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் சிகார் அனிஸ், மற்றும் அமந்த பெரோ. சிரேஸ்ட ஊடகவியலாளர் முசாமில் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment