அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் தவபுத்திரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். வயலில் வேலையை முடித்;துவிட்டு, குறித்த விவசாயி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானார்.
No comments:
Post a Comment