Wednesday, 28 September 2016

 அம்பாறையில் 167,000 ஏக்கரில் பெரும்போகச் செய்கை


NEWS BY - KRISH
2016 -2017ஆம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கையானது அம்பாறை மாவட்டத்தில் 167,000 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இதற்கான நீர்ப்பாசன வசதியானது சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து நேரடியாகவும் அச்சமுத்திரத்திலிருந்து சிறிய குளங்கள் மூலமாகவும் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ்.சிறிவர்த்தன தெரிவித்தார். விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான குழுக் கூட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. சேனநாயக சமுத்திரத்திலிருந்து நேரடியாக 76,140 ஏக்கருக்கும் கல்லோயா வலதுகரைக் குளத்திலிருந்து 24,010 ஏக்கருக்கும் பண்ணல்கம, எக்கல ஓயா, அம்பலா ஓயா, பன்னல ஓயா ஆகிய குளங்களிலிருந்து 19,850 ஏக்கருக்கும் நீர்ப்பாசன வசதி கொடுக்கப்படும்.

 இதற்காக சேனநாயக சமுத்திரத்தில் 8,324 அடிக் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 47,000 ஏக்கரும் மழை நீரை நம்பிச் செய்கை பண்ணப்படும் எனவும் அவர் கூறினார்.  

No comments: