Tuesday, 6 September 2016

மாதிரிக் கிராமவேலைத் திட்டம்

பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவினால் நடைமுறைப் படுத்தப்ட்டுவரும்   மாதிரிக் கிராமவேலைத்  திட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான  நிகழ்வு  பொத்துவில் - 16 கிராமசேவகர் பிரிவில் உள்ள அல் - ஹுதாமீள் எழுச்சிக் கட்டிடத்தில் இன்று (2016.09.06) பிரதேசசெயலாளர் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் தலைமைப்பீட  திவிநெகும  முகாமையாளர்,திவிநெகும கருத்திட்ட  முகாமையாளர்,வலயமுகாமையாளர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வேலைத் திட்டம் தொடர்பாகவிளக்கமளித்தனர்.
ஆத்மீகரீதியுடன்   கூடிய  மகிழ்ச்சிகரமான  கிராமம் ஒன்றினை  உருவாக்கும் நோக்கோடு 2015 ஆம் ஆண்டுபொத்துவில் பிரதேசசெயலகப் பிரிவில் பொத்துவில் - 16 அல் - ஹுதாகிராமம் தெரிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

No comments: