பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோமாரி வைத்தியசாலையை தரமுயர்த்தல் மற்றும் குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி கோமாரி பொதுமக்களால் இன்று(25) பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோமாரி மெதடிஸ்த ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வைத்தியசாலையை வந்தடைந்தது மகப்பேற்று மருத்துவமனை வேண்டாம் எங்களுக்கு மாவட்ட வைத்தியசாலையே வேண்டும் எனவும் நிரந்தர வைத்தியர்கள் உடன் நியமிக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டதுடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை, போதிய மருந்துகள் இன்மை, சீரற்ற அம்புலன்ஸ் சேவை ,தாதிமார் பற்றக்குறை போன்ற விடயங்கள் உடன் நிவர்த்திக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வைத்தியசாலைக்கு அண்மித்த திருக்கோவில் ,பொத்துவில் ஆகிய வைத்தியசாலைகள் சுமார் 19 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள நிலையில் முற்றிலும் காடுகளினால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசத்தின் வைத்தியசாலையின் தரமுயர்த்தல் பற்றி அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் போதியளவு வைத்திய சேவை இன்மையினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுவதாகவும்அவர்கள் சுட்டிக்காட்டினர்.
7கிராமங்களின் 2800இறகும்; மேற்பட்ட குடும்பங்கள் வைத்திய சிகிச்சை பெறும் இவ்வைத்தியசாலையை அதிகாரிகளால் புறந்தள்ளப்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றச் சாட்டினர் ,
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசனிடமும், பொலி பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்டவர்களிடம் மகஜர் கையளித்ததுடன்; ஜனாதிபதி சுகாதார அமைச்சர் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களுக்கான மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment