இலங்கையில் பெண்கள் மற்றும் சமாதானத்தினை கட்டியெழுப்பல் தொடர்பான கற்புல அரங்கேற்றக் கலையின் பயணக் கண்காட்சி நாட்டின் வடக்கு கிழக்கு தெற்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது
நாளை மறுதினம் 09, 10ம் திகதிகளில் காலை 09.00 மணிமுதல் மாலை 06.00மணிவரைக்கும் , அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளது
ஒரு கடினமான சமாதானத்தினை தேடுதல் நிலைமாற்ற காலத்தில் பெண்கள் எனும் தொனிப்பொருளில் பொகுஸ் விமென் பெண்களின் மாற்றத்திற்கான செயற்பாட்டு வலையமைப்பு மற்றும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்
இடம் பெறுகின்ற இக் கண்காட்ட்சியில் பிரபலமான ஓவியங்கள் சிற்பங்கள் ,வரைதல்கள் மற்றும் அரங்கேற்றக் கலையின் அம்சங்கள் கொண்டதாக இடம் பெறுகின்றமை சிறப்பம் சமாகும்
இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பல்கலைக் கழக மாணவர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் நிறுவன அமைப்புக்கள் சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளமுடியும் என அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்க இணைப்பாளர் வாணி சைமன் தெரிவித்தார்
No comments:
Post a Comment