NEWS BY - KIRUSHANTHAN
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமாரி களுகொல்ல எனும் பிரதேசத்தில் நேற்று(22) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் படுகாயங்களுடன் கோமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பொத்துவில் பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் களுகொல்ல வளைவில் எதிரே வந்த பஸ் வண்டிக்கு வழிவிட முயற்சித்த போதே தடுமாறி தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் இதனால் வீதி அருகில் இருந்த கம்பியுடன் மோதி இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கோமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஒருவர் மரணமடைந்த நிலையில் படுகாயமடைந்த மேலுமொருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார்.
விபத்தில் பலியான இளைஞன் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்தவர் என தெரியவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
பலியானவரின் சடலம் கோமாரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனா.
No comments:
Post a Comment