Monday, 26 September 2016
யானை தாக்கியதில் ஒருவர் பலி
NEWS BY - KIRUSHANTHAN
அம்பாறை, உகண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் கிராமவாசியான டபிள்யூ.பி.விமலசேன என்பவர் உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை அங்கு வந்த குறித்த யானை, அவ்வீட்டு முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூடையை உடைத்து நெல்லை உட்கொண்டுள்ளது. சத்தம் கேட்டு மேற்படி நபர் வெளியில் வந்தபோதே யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment