News By - K.Kirushanthan
அங்கு செய்திகளை சேகரிப்பதற்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை மயானத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை. இதனால், கம்பிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், கனத்தை மாயனத்துக்குள் ட்ரோன் கமெரா சுற்றிதிரிந்தமையால், பொலிஸார் கலவரம் அடைந்தனர். வானிலிருந்து படம்பிடித்த அந்தக் கமெராவைப் பிடிப்பதற்குப் பொலிஸாரினால் முடியவில்லை. எனினும், கனத்தை மயானத்தின் பாதுகாப்பு வேலிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கிப் பொலிஸார் ஓடிவந்தபோதிலும், ட்ரோன் கமெராவின் உரிமையாளரைப் பொலிஸாரினால் தேடிப்பிடிக்கமுடியவில்லை
No comments:
Post a Comment