Sunday, 16 July 2017

பொது விளையாட்டு மைதானம்

அகமட் எஸ். முகைடீன்-

பொத்துவில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ள பொத்துவில் சர்வோதாய புர 15 ஏக்கர் காணியை நிலஅளவை செய்து அதனை சுத்திகரிப்புச் செய்வதற்கான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பணிப்புரையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸரத்திற்கு விடுத்துள்ளமைக்கு அமைவாக இன்று (15) சனிக்கிழமை குறித்த பிரதேசத்தை பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது பொத்துவில் பிரதேச சபையின் காணி அலுவலகர் எம்.ஏ. பஜீர் அஹமட், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஐ.எல். ஹமீட் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். 

விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு சர்வோதய புரக் காணியை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை விரைவில் எடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரிடம் வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் உறுதியளித்துள்ள நிலையில் மேற்படி குழுவினர் அப்பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இக்கள விஜயத்தின்போது குறித்த விளையாட்டு மைதானத்தை பொத்துவில் பிரதான வீதியுடன் இணைக்கும் பாதையின் அமைவிடத்தையும் பார்வையிட்டு அடையாளப்படுத்தினர்.


No comments: