Saturday, 15 July 2017

தேசிய ஆக்கத்திறன் விருதுக்கான மாவட்ட மட்ட போட்டி


 இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற இந்துசமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான 2017ம் ஆண்டிற்கான தேசிய ஆக்கத்திறன் விருதுக்கான மாவட்ட மட்ட போட்டி நிகழ்வுகள் 15.07.2017ம் திகதியாகிய இன்று நடாத்தப்பட்டது.


இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செலயக பிரிவுகளில் போட்டியிட்டு முதலிடம் பெற்ற இந்து அறநெறிப்பாடசாலை மாணவர்கள்  இம்மாவட்ட மட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளில் பேச்சுப்போட்டி நிகழ்வுகள் யாவும் மட் - புனித திரேசா மகளீர் பாடசாலையிலும்  கதாப்பிரசங்கம் மற்றும் குழு நிகழ்வுகளான வில்லுப்பாட்டு, நாடகம், பரதநாட்டியம், பண்ணிசையும் பஜனை நிகழ்வுகள் நாவற்குடா இந்துகலாசார நிலையத்திலும் நடாத்தப்பட்டது.

இப்போட்டி நிகழ்வுகளில் முதலாம் இடத்திற்கு தெரிவுசெய்யப்படும் குழுநிகழ்வு மற்றும் தனிநபர் நிகழ்வுகள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் கொழும்பில் நமைபெறவுள்ள தேசியமட்ட போட்டியில் கலந்துகொள்ள தகுதியுடையதாகும் இந்நிகழ்வுகளில் பிரதேச மட்டத்திலிருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட முதலாம் இடம்பெற்ற குழுநிகழ்வு மாணவர்களும், தனிநிகழ்வு மாணவர்களும் கலந்து கொண்டனர்.












haran

No comments: