Saturday, 22 July 2017

துப்பாக்கிச் சூடு





யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில்   இன்று(22)      5.40 மணியளவில் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில்  இடம்பெற்ற இச்சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

 மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிபதியின் வாகனத்தை   வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது  அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

10 வெற்றுத்தோட்டா வீதியில் காணப்படுகின்றது.

தற்போது காயமடைந்த இரு   பொலிஸாரும்  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன்இ மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்இ சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நீதிபதி இளைஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்த இனந்தெரியாத நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய வேளையில் அவரின் மெய்ப்பாதுகாவலர்களின்  முயற்சியினால் நீதிபதி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள்  தப்பிச்சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி வருவதுடன் விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுஇ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது துப்பாக்கி சூட்டுக்கு  பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பிஸ்டல் ரக துப்பாக்கியை நல்லூர் கோயில் வளாகத்தில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


இதேவேளை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு Rating: 4.5 Diposkan Oleh: Battinews batticaloa

No comments: