Thursday, 27 July 2017

ஆலையடிவேம்பில் கட்புலன் குறைந்தோருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு



கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பார்வைத் திறன் குறைந்த முதியோருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச சமுக பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் ஆறு வயோதிபர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கிவைத்திருந்தார்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி.சண்முகநாதனும், ஆர்.சிவானந்தமும் கலந்துகொண்டிருந்தனர்.











 

No comments: