கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கல்முனை இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் 14 ஆம் திகதி முதல் உகந்தை முருகன் ஆலயத்திற்கு பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில் இன்று முதல் நாள்தோறும் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் முதலாவது பஸ் காலை 6.15 மணிக்கும் இரண்டாவது பஸ் காலை 7.30 மணிக்கும் கல்முனை சாலையில் இருந்து புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்
இதே வேளை ,அக்கரைப்பற்று சாலையில் இருந்து நாள்தோறும் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் முதலாவது பஸ் காலை 07.45 மணிக்கும் இரண்டாவது பஸ் மாலை 03.30 மணிக்கும் இடம்பெறும் பிரயாணிகளின் நலன் கருதி ஆசனப் பதிவுகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது
haran
No comments:
Post a Comment